சாரதி அனுமதிப்பத்திரம் பெற 950 தடவைகள் பரீட்சைக்கு தோற்றிய பெண்மணி
அந்த வகையில் சாஸாசூன் என்ற தென் கொரிய பெண்மணி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சையில் தோற்ற அளவுக்கதிகமான தடவைகள் முயற்சியெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான பரீட்சையை 949 தடவைகள் எடுத்து தோல்வி கண்ட இந்தப் பெண்மணி, மனம் தளராது 950 ஆவது தடவையாகவும் அப் பரீட்சைக்கு தோற்றி வெற்றி பெற்றுள்ளார்.
தென் கொரியத் தலைநகர் சியோலுக்கு தெற்கே 130 மைல் தொலைவிலுள்ள ஜினோன்யு நகரைச் சேர்ந்த சாஸா சூன் (68 வயது) 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதற் கொண்டு இப்பரீட்சைக்கு தோற்றி வருகிறார்.
சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பப் படிவங்களைப் பெற அவர் இதுவரை 4200 ஸ்ரேலிங் பவுணை செலவிட்டுள்ளார்.
தனது மரக்கறி விற்பனைத் தொழிலை நடத்துவதற்காக வாகன அனுமதிப்பத்திரமொன்று கட்டாயமாக தேவைப்பட்டதன் காரணமாகவே இம் முயற்சியில் தீவிரமாக இறங்கியதாக சாஸாசூன் கொரிய டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
0
comments
Labels: சமூகம், தென் கொரியா, நிகழ்வுகள், வீரகேசரி
அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மீது சப்பாத்து வீச்சு

அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜோன் ஹோவர்ட் இங்கிலாந்து சென்றுள்ள நிலையில் அவர் மீது மாணவர் ஒருவர் சப்பாத்தை கழற்றி வீசியுள்ளார்.
அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த விவாதத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் சென்றிருந்தார். அப்போது அவுஸ்திரேலிய மாணவர் ஒருவர், 'இனவெறி பிடித்தவரே' எனக் கூச்சலிட்டவாறே தன் சப்பாத்தை கழற்றி அவரை நோக்கி வீசியெறிந்தார்.
வீசப்பட்ட சப்பாத்தை இன்னொரு மாணவர் பிடித்து விட்டதால், பிரதமர் மீது சப்பாத்து படாமல் தடுக்கப்பட்டது.
முன்னதாக அவரை அன்ட்ரூ சாப்மான் அறிமுகப்படுத்தியபோது, இன்னோர் மாணவர், 'அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிப்போ இனவெறியரே' என்று கூச்சல் போட்டார். இதை காதில் வாங்கிக்கொள்ளாமல், அவர் பேச எழுந்து மேடைக்குச் சென்றார்.
அதன் பிறகு தான் சப்பாத்து வீச்சு சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து குறித்த மாணவர் அம்மண்டபத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
3
comments
Labels: அரசியல், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நிகழ்வுகள், லண்டன், வீரகேசரி
மனிதரின் கண்ணிலிருந்த 22 புழுக்கள்
எழுபத்து நான்கு வயது முதியவர் ஒருவரின் வலது கண்ணிலிருந்து, அறுவை சிகிச்சை மூலம், 22 புழுக்களை டாக்டர்கள் வெளியே எடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியா, கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கூத்தாட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (74) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கே இவ்வாறு சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இவரது வலது கண்ணில் அடிக்கடி வலியும், எரிச்சலும் ஏற்பட்டு வந்தது. டாக்டர்கள் பலரிடம் காண்பித்தும் குணமடையவில்லை. அங்குள்ள தேவமாதா மருத்துவமனையில் நடந்த கண் பரிசோதனையில், அவரது வலது கண்ணை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவரது வலது கண்ணில் கருவிழிப் படலத்திலிருந்து, 22 புழுக்கள் வெளியே எடுக்கப்பட்டன.
இவை ஒவ்வொன்றும், 4 செ.மீ., நீளத்தில் காணப்பட்டன. அவை, சென்னை மருத்துவ ஆய்வு நிலையத்திற்கு, ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் வழியாக பரவும் பைலேரியா வகையைச் சேர்ந்த புழுக்கள் இவை என டாக்டர்கள் தெரிவித்தனர்.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
1 comments
Labels: இந்தியா, சமூகம், நிகழ்வுகள், வீரகேசரி
குளிர் காய்வதற்காக ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர்கள் தீக்கிரை
கொலம்பியாவை நடுங்கச் செய்த கடத்தல் கும்பல் தலைவன், பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக காட்டில் தங்கியிருந்தபோது தனது மகள் குளிர் காய்வதற்காக ரூ.17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுக்களை எரித்தது தெரிய வந்துள்ளது.
கொலம்பியாவைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபர்.
1980களில் ஆரம்பித்த அட்டகாசம் 1993 வரை நீடித்தது.
இவர் தனது கும்பலுடன் இணைந்து ஆயிரக்கணக்கானோரை கொலை செய்து கொள்ளையடித்து, போதைவஸ்து வியாபாரம் நடத்தி, கடத்தல் தொழிலில் ஈடுபட்டு கிடைத்த பணத்தில் அடுக்குமாடி விடுதிகள், விமானங்கள், தனியார் வனவிலங்கு பூங்கா நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை இவரை 1989ஆம் ஆண்டின் 7ஆவது மிகப் பெரிய உலக பணக்காரர் என்று அறிவித்தது.
இவரது தொல்லைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததால், அமெரிக்க தொழில்நுட்ப உதவியுடன் கொலம்பிய பாதுகாப்பு படைகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கின.
பாதுகாப்பு படைகளின் தேடுதல் வேட்டையின்போது சில நாட்கள் காடுகளில் பதுங்கியபோது மகளின் குளிரைப் போக்க ரூ. 17 கோடி மதிப்புள்ள டொலர் நோட்டுகளை இரவு முழுவதும் எஸ்கோபர் எரித்தது இப்போது தெரியவந்துள்ளது.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
0
comments
Labels: அமெரிக்கா, கொலம்னியா, சமூகம், நிகழ்வுகள், வீரகேசரி
பயங்கரவாதிகளை எதிர்கொண்ட வீரப்பெண்
இந்தியா, ஜம்மு காஷ்மீரில் வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீரப்பெண் ரக்சானா சிறப்பு பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வீரத்தை போற்றும் வகையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி ஜம்மு காஷ்மீரில் ரசூரி மாவட்டத்தில் 6 பயங்கரவாதிகள் ஒரு வீட்டிற்குள் நுழைந்து அங்கு குடும்பத்தினருடன் இருந்த இளம் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்கும்படி துப்பாக்கியை காட்டி மிரட்டினர்.
இதனால் மிகுந்த அச்சத்திற்கு உள்ளான பெண்ணின் பெற்றோர் மகளை ஒப்படைக்க முடியாது என மறுத்தனர். இதனையடுத்து பயங்கரவாதிகள் அவர்களை அடித்து தாக்கினார்கள்.
இதனைப் பார்த்து கொதித்துப்போன இளம்பெண் ரக்சானா கவுசார் ஒரு பயங்கரவாதி மீது பாய்ந்து சுவர் மீது தள்ளி விட்டார். தொடர்ந்து அந்த பயங்கரவாதியின் ஏ.கே.47 ரக துப்பாக்கியை பிடுங்கி பயங்கரவாதிகளை நோக்கி சுட்டார். இதில் ஒரு பயங்கரவாதி இறந்தார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து மற்றவர்கள் தலைதெறிக்க தப்பித்து ஓடினர்.
இது குறித்து ரக்சானாகவுசார் கிராம பாதுகாப்புக் குழுவினர் கொடுத்த துப்பாக்கி சுடும் பயிற்சிதான் எனக்கு அந்நேரத்தில் உதவியது என்றார்.
பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற ரக்சானா தற்போது சிறப்பு பொலிஸ் அதிகாரியாக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் டில்லிக்கு அவரை வரவழைத்த மத்திய அரசு அதிகாரிகள் கௌரவித்து பரிசுத்தொகையும் வழங்கியுள்ளனர். மேலும் ஜனாதிபதியும் இப்பெண்ணை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது சகோதரர் அஜ்ஜாஸ், மற்றும் உறவினர் உசேன் ஆகியோருக்கும் பொலிஸ் படையில் பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
1 comments
Labels: இந்தியா, சமூகம், நிகழ்வுகள், வீரகேசரி
காலையில் திருமணம்; மாலையில் குழந்தைப்பேறு
பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவியொருவர் காலையில் திருமணம் செய்து மாலையில் குழந்தையொன்றை பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கோர்டசா (வயது 11) என்ற சிறுமிக்கும் ஜெலிஸ்கோ (வயது 19) என்ற இளைஞருக்குமே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி இருவரும் நண்பர்களாக நெருங்கிப் பழகி வந்த நிலையில் கோர்டசா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி காலையில் திருமணம் நடந்தது. சிறிது நேரத்தில் கோர்டசாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது.
திருமண கோலத்தில் இருந்த அவரை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் மகிழ்ச்சியோடு காணப்பட்ட கோர்டசா, நான் இதுவரை பொம்மைகளை வைத்து விளையாடி வந்தேன். இப்போது எனக்கே ஒரு உயிருள்ள பொம்மையொன்று கிடைத்துவிட்டது என்றார்.
எனினும் அந்நாட்டில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தால் 6 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
இதனால் குழந்தையின் தந்தை ஜெலிஸ்கோதான் கவலையடைந்துள்ளார்.
பல்கேரியாவில் 13 வயது பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சாதாரண விடயம். ஆனால் 11 வயதில் குழந்தை பெற்றிருப்பது இதுதான் முதல் முறை.
உலகிலேயே 11 வயதில் குழந்தை பெற்ற முதல் பெண் கோர்டசாதான் என்று பல்கேரியா நாட்டு பத்திகைகள் குறிப்பிட்டுள்ளன.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
0
comments
Labels: சமூகம், நிகழ்வுகள், பல்கேரியா, வீரகேசரி
உலகிலேயே மிகவும் பருமனான நபர்

980 இறாத்தல் நிறையுடைய உலகிலேயே மிகவும் பருமனான நபர் பிரித்தானியாவில் இருக்கும் இரகசியம் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் பிரித்தானிய "த சன்' ஊடகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
அளவுக்கு அதிகமாக உண்ணும் வியாதியால் பாதிக்கப்பட்ட போல் மேஸனது (48 வயது) உயிரைக் காப்பாற்ற 20,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போல் மேஸன் தினசரி 20,000 கலோரிகளைக் கொண்ட உணவை உள்ளெடுத்து வருகிறார். இது வயது வந்த ஆணொருவர் உட்கொள்ளும் 2500 கலோரிகளை விட 8 மடங்கு அதிகமாகும்.
அவர் ஒரு இரவு மட்டும் மூன்று குடும்பங்களுக்கு போதுமான உணவை உள்ளெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சபோல்க் நகரிலுள்ள இப்ஸ்விச் எனும் இடத்தில் வசிக்கும் அவர், கடந்த 8 வருட காலமாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவரது சுகாதார கவனிப்புக்காக மட்டும் வருடாந்தம் 100,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான அரசாங்க வரிப் பணம் செலவிடப்பட்டு வருகிறது.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
1 comments
Labels: சமூகம், நிகழ்வுகள், பிரித்தானியா, வீரகேசரி
5 வயது ஆணழகன்
மிக இளம் வயதில் தசைகள் உருண்டு திரண்டு கட்டுக்கோப்பான உடல் அழகைப் பெற்றவர் என்ற உலக சாதனையை ரோமானியாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் செய்துள்ளான்.

தற்போது தனது பெற்றோருடன் இத்தாலியில் வாழ்ந்து வரும் கிலியானோ ஸ்ரோ என்ற மேற்படி சிறுவன் தனது இரு வயது முதற்கொண்டே தசைகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் பயிற்சிகளைப் பெற்றுவந்தான்.
கிலியானோ தனது கால்களிடையே இரும்பு பந்தை வைத்தபடி 10 மீற்றர் தூரம் கைகளால் வேகமாக நடந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறான்.
இது தொடர்பில் கிலியானோவின் தந்தை கியுலியன் ஸ்ரோ விபரிக்கையில், "எனது மகன் பிறந்தது முதற்கொண்டே நான் உடற்பயிற்சி செய்வதை பார்த்து வருகிறான். மிக இள வயதில் கட்டுடல் பயிற்சி வழங்குவது ஆபத்தானது என்பதை நான் அறிவேன். நான் எனது மகனுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் மிகச் சிரமப்பட்டு பயிற்சிகளை வழங்கினேன். அவனை ஒரு போதும் தனியே பயிற்சி செய்ய நான் அனுமதித்ததில்லை'' என்று தெரிவித்தார்.
கியுலியனின் நான்கு பிள்ளைகளில் மூத்த பிள்ளையான கிலியானோ, ஏனைய சிறுவர்கள் போல் படங்கள் வரைவதிலும் விளையாடுவதிலும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
0
comments
Labels: இத்தாலி, சமூகம், நிகழ்வுகள், ரோமானியா
இரத்தம் உறிஞ்சும் அட்டை மூலம் கொள்ளையரை கண்டுபிடித்த பொலிஸார்
இவ்வாறான குற்றவியல் பரிசோதனையொன்று நடத்தப்பட்டது உலகிலேயே இது முதல் தடவையாகும். 8 வருடங்களுக்கு முன் 71 வயது பெண்மணியின் வீட்டில் கொள்ளைக் கோஷ்டியொன்று தனது கை வரிசையை காட்டி விட்டுச் சென்றிருந்தது.
இந்நிலையில் மேற்படி கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்த பீற்றர் அலெக் கனொன் என்பவரது குருதியை அட்டையொன்று உறிஞ்சியது. இந்த அட்டையானது பொலிஸாரால் ஒரு தடயமாக எடுத்து வைக்கப்பட்டு அதனது குருதி மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் பீற்றர் அலெக் கனொன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார்.
அவரது குருதி மாதிரியானது இரத்தம் உறிஞ்சும் அட்டையின் குருதி மாதிரியை ஒத்திருந்தது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் தான் பங்கேற்றதை கனொன் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார்.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
1 comments
Labels: அவுஸ்திரேலியா, சமூகம், தஸ்மானியா, நிகழ்வுகள், வீரகேசரி
குழந்தையின் தோலில் புனித குர்ஆன் வசனங்கள்
இக் குழந்தையின் உடலில் குர்ஆன் வசனங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை புரியாமல் மருத்துவ உலகே திகைப்படைந்துள்ளது.
தென் ரஷ்யாவில் செச்சினியாவிலுள்ள தகெஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த அலி யகுபோவ் என்ற மேற்படி குழந்தை பிறந்த பின் அதன் நாடியில் "அல்லாஹ்" என்ற வார்த்தை தோன்றியதையடுத்து அவனது பெற்றோர் வியப்படைந்தனர்.
தொடர்ந்து அக் குழந்தையினது முதுகு, கரங்கள், கால்கள் மற்றும் வயிற்றில் அராபிய வசனங்கள் பல தோன்ற ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
தற்போது 9 மாத வயதாகும் அலி யகுபோவின் தோலில் வாரத்திற்கு இரு தடவைகள் புதிய குர்ஆன் வசனங்கள் தோன்றுவதாகவும் புதிய வசனங்கள் தோன்றும் போது பழைய வசனங்கள் மறைந்து விடுவதாகவும் அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
திங்கட்கிழமையிலும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவுகளிலும் சிறுவனது உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றி வருவதாகக் கூறிய மதினா, இதன்போது குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகரித்து சிறுவன் மிகுந்த வேதனையுடன் அழுவதாகக் கூறினார்.
"இதன்போது எமது மகனை பற்றிப் பிடிக்க முடியாது. அவனது உடல் உதறிக் கொண்டிருப்பதால் அவனை தொட்டிலிலேயே படுக்க வைத்திருப்போம். அவன் வேதனைப்படுவதைப் பார்க்க கஷ்டமாக இருக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அலி யகுபோவின் உடலில் குர்ஆன் வசனங்கள் தோன்றும் வரை மத நம்பிக்கையற்றவராக இருந்த அவரது தந்தை, தற்போது தீவிர மதப் பற்றாளராக மாறியுள்ளதாக பாலகனின் தாயாரான மதினா தெரிவித்தார்.
இது தொடர்பில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அஹமட்பாஷா அமிராலேவ் விபரிக்கையில், "இந்த சிறுவன் இறைவனின் தூய அடையாளமொன்றாக உள்ளான்.
எமது பிரதேசத்தில் நிலவும் பதற்ற சூழ்நிலையை நிறுத்தும் முகமாக அல்லாஹ்வே இப்பாலகனை எம்மிடம் அனுப்பி வைத்துள்ளான்'' என்று கூறினார்.
Posted by
எம்.ரிஷான் ஷெரீப்
at
0
comments
Labels: சமூகம், செச்சினியா, நிகழ்வுகள், ரஷ்யா, வீரகேசரி






