






கொழும்பு,முகத்துவாரம் அளுத்மாவத்தைப் பகுதியில் காலை 6.10 மணியளவில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 3 மகளிர் காவல்துறையினர் உட்பட 4 காவல்துறையினரும் 3 பொதுமக்களுமாக 7 பேர் காயமடைந்துள்ளனர். சந்தேகநபரின் உடல் சிதறிப் பலியாகியுள்ளார்.
மட்டக்குளிப் பகுதியில் வியாழக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் அதிகாலை 5 மணியளவில் அளுத்மாவத்தை 4ஆம் ஒழுங்கையிலுள்ள வீடுகளில் காவல்துறையினர் தேடுதலையும் சோதனையையும் நடத்தியுள்ளனர்.
வீடு வீடாக நடந்த இந்தத் தேடுதலின் போது அந்த ஒழுங்கையிலுள்ள குறிப்பிட்ட அவ்வீட்டிலிருந்த இளைஞன் தற்கொலைக்குண்டை வெடிக்கவைத்துள்ளார்.
இதனால் இளைஞன் உடல் சிதறிப் பலியானதோடு அருகிலிருந்தவர்கள் படுகாயங்களுக்குள்ளானார்கள்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரியின் நிலை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதலையடுத்து சம்பவ இடத்திற்கு மேலதிக படையினரும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதோடு, அப்பகுதியில் மேலும் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை அங்கி -1
தற்கொலை இடுப்புபட்டி -1
கிளைமோர் குண்டுகள் - 6
கைக்குண்டுகள் - 4
ஆகியன சம்பவ இடத்தில் நடத்திய தேடுதலின்போது படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது.
தற்கொலைதாரி தங்கியிருந்த வீட்டின் காவல்துறையினர் சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் கதவை திறக்குமாறு காவல்துறையினர் உரத்துக் கூறியும் கதவு திறக்கப்படவில்லை.
இதனையடுத்து காவல்துறையினர் கதவை உடைத்து உட்சென்றபோது தற்கொலைதாரி குண்டு வெடிக்க வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள்... கோப்பைகள்...
6 hours ago


0 comments:
Post a Comment