கொட்டாவி விட்டவருக்கு 6 மாத சிறைத்தண்டனை

கொட்டாவி விட்டமைக்காக நபரொருவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விசித்திர சம்பவம் அமெரிக்க சிக்காகோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

போதைவஸ்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனது மைத்துனர் ஜேஸன் மேபீல்ட்டிற்கு என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அறிவதற்காக, கிலிப்டன் வில்லியம் (33 வயது) சிக்காகோவில் வில் எனும் இடத்திலுள்ள மேற்படி நீதிமன்றத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வில்லியத்தின் மைத்துனருக்கு 2 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி டானியல் ரொஸாக், அச்சமயம் கொட்டாவி விட்ட வில்லியத்துக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வில்லியம் நடந்ததாக நீதிபதி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை வில்லியமின் மன்னிப்புக் கோரலை நீதிபதி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர் விடுதலை செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 comments:

Ram said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யுங்கள்

Anonymous said...

"கிலிப்டன் வில்லியம்" கறுப்பினத்தை சார்ந்தவராயிற்றே கொட்டாவி என்ன கண் சிமிட்டினால் கூட நிரவெறி பிடித்த அமெரிக்கர்களுக்கு பிடிக்காது.எப்படித்தான் ஒபாமாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது ஆச்சர்யமாகவுள்ளது.
-------shah------

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ராம், நீங்கள் சொன்னபடியே இணைத்துவிட்டேன். நன்றி நண்பரே !

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் ஷா,

//"கிலிப்டன் வில்லியம்" கறுப்பினத்தை சார்ந்தவராயிற்றே கொட்டாவி என்ன கண் சிமிட்டினால் கூட நிரவெறி பிடித்த அமெரிக்கர்களுக்கு பிடிக்காது.எப்படித்தான் ஒபாமாவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது ஆச்சர்யமாகவுள்ளது.
-------shah------//

அப்படியும் இருக்கலாம். உங்கள் பார்வை ஆச்சரியப்படுத்துகிறது.

நன்றி நண்பரே !