சிறிய மகளை பாசத்துடன் முத்தமிட்ட தந்தைக்கு 15 வருட சிறை

தனது 8 வயது மகளை பாசத்துடன் முத்தமிட்ட தந்தையொருவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

தனது மனைவி மகளுடன் பிரேசிலுக்கு சுற்றுலா சென்ற இத்தாலியைச் சேர்ந்த மேற்படி வர்த்தக பிரமுகர் (வயது 48), அங்குள்ள கடற்கரையில் அமர்ந்திருந்த வேளை தனது மகளை செல்லமாக கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

அவர் முத்தமிட்டதுவுடன், அங்கு கடமையிலிருந்த பொலிஸார் அவரைக் கைது செய்தனர்.

பொது இடத்தில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டி அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பிரேசிலின் புதிய சட்டப்படி பொது இடத்தில் முத்தமிடுவது சட்ட விரோதமானதாகும்.

0 comments: