மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், ஓய்வூதியம் பெற வந்த மூதாட்டி மீது, பாதுகாப்பு பொலிஸாரின் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சௌந்தரவள்ளி (வயது 58) என்ற மூதாட்டியே சதீஷ்குமார் (வயது 29) என்ற பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் இவ்வாறு மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, காலை 11.30 மணிக்கு, சதீஷ்குமார் துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, அது திடீரென வெடித்தது. துப்பாக்கி தோட்டா, 40 மீ. பாய்ந்து, அங்கிருந்த பாலமொன்றின் சுவரில் பட்டுத் தெறித்து, அவ்வழியே சென்ற மேற்படி மூதாட்டியின் இடது கழுத்தில் பாய்ந்து, வலது தோள்பட்டை வழியே வெளியேறியது.
தாட்டி சம்பவ இடத்திலேயே இறந்தார். தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தியின் நிகழ்ச்சி நடைபெற்ற இடமான காந்தி நினைவுப் பூங்காவிலிருந்து, அரை கி.மீ.
தூரத்தில் இச்சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தைகள்... கோப்பைகள்...
6 hours ago



0 comments:
Post a Comment