காதல் முறிவடைந்ததால் மனமுடைந்த இளைஞர் ஒருவர், காதலி இணையத்தள புகைப்படக் கருவியில் பார்த்துக் கொண்டிருக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிலியில் இடம்பெற்றுள்ளது.
சிலியின் தலைநகர் சாந்தியோகோவின் தென்கிழக்கே 90 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சான் பிலிப்பே எனும் இடத்தைச் சேர்ந்த சிமொன் வெனேகஸ் (26 வயது) என்ற இந்த இளைஞன், இணையத்தள புகைப்படக் கருவியை தனது வீட்டிலுள்ள மரமொன்றினை நோக்கி திருப்பி வைத்துவிட்டு தனது காதலியுடன் (23 வயது) தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
அதன் பின் மரக்கிளையில் கயிறொன்றைக் கட்டிய சிமொன் வெனேகஸ், "நான் இப்போது என்ன செய்கிறேன் என்று பார். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். நீ நலமாக இரு'' எனக் கூறியபடி கழுத்தில் கயிற்றை மாட்டியுள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்த காதலி, வெனேகஸின் வீட்டிற்கு அருகிலிருந்த நண்பர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை காப்பாற்றும்படி கோரியுள்ளார்.
ஆனால் நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வரும் முன் வெனேகஸின் உயிர் பிரிந்துவிட்டது.
வெனேகஸுக்கும் அவரது காதலிக்கும் இடையிலான உறவு ஒரு வருடத்திற்கு முன்பு முறிவடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தத் தற்கொலை சம்பந்தமான தகவல்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
குழந்தைகள்... கோப்பைகள்...
6 hours ago



2 comments:
ரிஷான் ,உங்களைக் காணோம்ன்னு அறிவிப்பு செய்யலாம்ன்னு நினைகிறப்ப இப்படி ஒரு செய்தியோட வந்து நிக்கிறீங்க ....இன்னும் எத்தனை தற்கொலை இப்படி நேரடி ஒளிபரப்பு ஆகப்போகுதோ
அன்பின் பூங்குழலி,
//ரிஷான் ,உங்களைக் காணோம்ன்னு அறிவிப்பு செய்யலாம்ன்னு நினைகிறப்ப இப்படி ஒரு செய்தியோட வந்து நிக்கிறீங்க ....//
தொடர் பதிவில் சிறு தடங்கல் ஏற்பட்டதுதான்..இப்ப சரி. :)
//இன்னும் எத்தனை தற்கொலை இப்படி நேரடி ஒளிபரப்பு ஆகப்போகுதோ //
நவ நாகரீகங்களுக்குள் காலம் புகுந்துவிட்ட பிறகு இவை போன்றவையெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டனதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment