6 வயது குழந்தையை தவறான நோக்கத்தில் முத்தமிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 37 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
மாடெரா நகரைச் சேர்ந்த கிறிஸ்டா ஆர்செனியக்ஸ் என்ற மேற்படி பெண், பாரிஸ் லேக்கிலுள்ள குடிபான நிலையமொன்றுக்கு வெளியே வைத்து மேற்படி குழந்தையை வழிமறித்து முத்தமிட்டுள்ளார்.
"நீ மிகுந்த பாலியல் கவர்ச்சியுடைய ஒருவன்" எனக் கூறியவாறே கிறிஸ்டா குழந்தையை முத்தமிட்டு விட்டு குடிபான நிலையத்துக்குள் ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தான் தவறான நோக்கத்தில் குழந்தையை முத்தமிடவில்லை. செல்லமாகவே முத்தமிட்டதாக கிறிஸ்டா வாதிட்டு வருகிறார்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிறிஸ்டாவுக்கு 100,000 அமெரிக்க டொலர் பிணையில் வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
14 வயதுக்கு கீழ்ப்பட்ட சிறுவன் ஒருவனுடன் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள்... கோப்பைகள்...
6 hours ago


0 comments:
Post a Comment