கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தை

கோமா நிலைக்குச் சென்ற பெண்ணொருவர், தனது குழந்தையின் குரலால் சுய உணர்வுக்கு மீண்ட சம்பவம் பிரித்தானிய வரெக்ஸ்ஹாம் நகரில் இடம்பெற்றுள்ளது.

கரென் மொறிஸ்ரோ கிளட்டன் (32 வயது) என்ற மேற்படி பெண்மணி, கடந்த ஜூலை மாத இறுதியில் தனது மகனுக்கு 2 1/2 மாத வயதாக இருக்கும் போது நோய்த் தொற்றுக்கு இலக்காகி கோமா நிலைக்குச் சென்றார்.

கோமா நிலையில் தனது உள்ளுணர்வு தான் மரணமடைய வேண்டும் என்றே விரும்பியதாகவும் ஆனால், தனது மகன் ஒலிவரின் குரலைக் கேட்டதும் 'தான் உயிர் வாழ்ந்தே ஆக வேண்டும்' என்ற உத்வேகம் ஏற்பட்டதாகவும் கரென் தெரிவித்தார்.

கரென் கோமா நிலைக்குச் சென்ற போது அவசர சிகிச்சைப் பிரிவில் பல வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் தனது மகனது குரலை கேட்க முடியாதிருந்தது. சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்ட பின் மகனின் குரலைக் கேட்டு கோமா நிலையிலிருந்து அவர் மீண்டுள்ளார்.

4 comments:

ராஜா சந்திரசேகர் said...

thanks for sharing the news

Kolipaiyan said...

Great!

seidhivalaiyam.in said...

Hi
Fantastic
எங்களுடைய இணையத்தில் தாங்கள் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. மேலும் தங்களுடைய பிளோக்கினை எங்களுடைய தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி.

இப்படிக்கு
செய்திவலையம் குழுவினர்

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'கோமா நிலைக்கு தள்ளப்பட்ட தாயை காப்பாற்றிய குழந்தை' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 11th October 2009 12:06:02 PM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/123611

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team