திருமணம் நடைபெற்ற தினத்தன்று இரவு திருடன் என தவறுதலாக நினைத்து மணமகனால் மணமகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓய்வு பெற்ற நிறைவேற்றதிகாரியான ஜோன் தபுட்(62 வயது) என்பவரும் அவரது காதலியான நான்ஸி டின்ஸ்மோரும் (62 வயது) காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்த அன்றைய இரவில் திடீரென ஜோன் தபுட்டிற்கு விழிப்பு ஏற்பட்டது. தனது புது மனைவி தன்னருகே கட்டிலில் படுத்திருப்பதாகக் கருதிய ஜோன் தபுட்,வேறு எவரோ அறையில் நடமாடுவதாக உணர்ந்தார்.
திருடன் எவனோ நுழைந்திருப்பதாக எண்ணி அச்சமடைந்த அவர் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளார்.
மார்பில் ஒரேயொரு குண்டு பாய்ந்த நிலையில் நான்ஸி உயிரிழந்தார். தவறுதலாக தனது அன்புக்குரிய மனைவியைச் சுட்டுக் கொன்றதை அறிந்த தபுட் கதறி அழுதார்.
இறுதியில் நான்ஸியின் மரணச் சடங்கு அவரது திருமணம் இடம்பெற்ற தேவாலயத்திலேயே நடைபெற்றது.
தபுட்டிற்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.
"இது துக்ககரமான விபத்து" என பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி கெவின் புறுகுனல் தெரிவித்தார்.
குழந்தைகள்... கோப்பைகள்...
6 hours ago


3 comments:
என்ன கொடுமை சார் இது!
வாங்க வால்பையன் :)
//என்ன கொடுமை சார் இது!//
கொடுமைதான். கொன்றவரை விசாரணையேதுமின்றி அப்படியே விட்டுவிடுவதென்பது :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
Hi Rishan,
Congrats!
Your story titled 'திருடன் என நினைத்து மணமகளை சுட்டுக்கொன்ற மணமகன்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 17th October 2009 02:36:03 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/125930
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
Post a Comment